Monday 28 September 2009

HAPPY VIJAYADASAMI

வணக்கம் நண்பர்களே .......
உங்கள் அனைவருக்கும் இனிய தசரா மற்றும் நவராத்திரி வாழ்த்துக்கள் நவராத்திரி பண்டிகை ரொம்ப நல்லா கொண்டாடி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். இந்த வாரம் நம்ம ஊரு இஸ்திரி கடைக்கு தான் ரொம்ப நல்ல வருமானம். வீட்டு பட்டு புடவை எல்லாம் ட்ரை வாஷுக்காக இஸ்திரி கடைக்கு போகும். இந்த ட்ரை வாஷ் செய்யற காசுக்கு ஒரு புது புடவையே வாங்கிடலாம். !!! இருக்கட்டும் இருக்கட்டும்.

எனக்கு தெரிஞ்சு நம்ம ஊரு புள்ளைங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமா கொண்டாடுற பண்டிகை இந்த சரஸ்வதி புஜை தான். அன்னைக்கு மட்டும் தான் நம்ம புள்ளிங்கோ எல்லாம் நைனா, அம்மா சொல்லற பேச்சை எல்லாம் அப்படியே கேட்பாங்கோ.. அம்மா, அப்பா சொல்ல முன்னாடியே புஸ்தகத்தை எல்லாம் கொண்டு புஜைல வைச்சுடுவானுங்கோ.. பாவம் பெத்தவங்க குழைந்தங்களை ரொம்போ நல்லவங்கனு சொல்லிடுவாங்க. நம்ம ஊரு புளைங்கலக்கு தினமுமே சரஸ்வதி புஜை தான். விளையாட்டு புள்ளைங்க. வராத படிப்பை வாவானா எப்படி வரும்?.......

நம்ம ஆம்பிளைங்க தான் பாவம். சும்மா ஒன்பது நாளைக்கு எல்லார் வீட்டு சுண்டலையும் துன்னுட்டு வயிறு நேஷனல் பெர்மிட் லாரி கணக்கா சத்தம் கொடுக்கும். அலாரம் வைக்காமலே விடிய காலைல எழுந்திடுவாங்க. இந்த ஆம்பிளைங்களுக்கு எந்த வீட்டு சுண்டல்னும் தெரியாது, என்ன சுண்டல்னும் தெரியாது. சும்மா மாவு மிஷன் கணக்கா தர சுண்டலை எல்லாம் வாய்குள்ளார போட்டுக்குவாங்க. அவங்க வயித்துக்கு மட்டும் வாய் இருந்தா சும்மா கெட்ட கெட்ட வார்த்தையா சொல்லி திட்டும். "என்னது இது சின்ன புளைதனமா இருக்கு.. பிளடி நொன்சென்ஸ்.."

இந்த பெண்கள் இரண்டு வாரத்திற்கு ரொம்ப பிஸி. எல்லார் வீட்டு நவராத்ரி மற்றும் பட்டு புடவை, சுண்டல் எல்லா விஷயம் பற்றியும் சும்மா ரொம்ப பேசி ரொம்ப அலசி அலசி ஆராய்ஞ்சு ரிப்போர்ட் ரெடி செய்து விடுவார்கள்.
Anyways these 9 days of Navaratri unites lots of people இன் particular ladies and keeps a good environment all over.
வரட்டா.................