Tuesday 23 January 2018


மயான அனுபவங்கள்

வாழ்க்கையில முதல் முறையா ரொம்ப நேரம் இருந்தேன் மயானத்துல.. ஜனவரி 6 ஆம் தேதி என்னோட பாட்டி இறந்துட்டாங்க.  அடுத்த நாள், அதாவது ஜனவரி 7 ஆம் தேதி அன்னைக்கு தகனம். நானும் போயிருந்தேன் மயானத்துக்கு. அன்னைக்கு ஞாயித்துக்கிழமை, மயானதுக்குள்ள நுழையும் பொது நாங்க மட்டும் தான் இருந்தோம். மணி ஒரு 11.30 இருக்கும், அந்த நொடியில இருந்து ஏறக்குறைய 4 மணி நேரம் நான் அங்க தான் இருந்தேன். அங்க நான் பார்த்த, கவனிச்ச விஷயங்கள் மறக்கவே முடியாதவைகள்.

நாங்க நுழைஞ்ச 15 நிமிஷம் கழிச்சு இன்னொரு பிணம் எடுத்துட்டு வந்தாங்க. இந்த மயானம், ஒரு எரிவாயு தகன மேடை. அடுத்த 20 நிமிஷத்துல இன்னொரு 3 பிணம் வந்தாச்சு. மயானம் உள்ள இடமே இல்ல. 2 பிணம் ரோடுல நிக்க வெச்சுட்டு, இன்னொரு பிணத்தை மயானம் நுழைவாயில் கிட்ட நிக்க வெச்சுட்டாங்க. வரிசைபடி எங்க பாட்டி உடல் தான் முதல எரியூட்டனும். அப்படி தான் நடந்ததும் கூட.

கேள்வி 1:
ஆனா நான் இப்படி 4 பிணங்களை ஒரே நேரத்துல பார்த்ததும் பக்குனு இருந்தது. பிணத்தை கொண்டு வந்த எல்லாருமே அழுதுட்டு இருந்தாங்க, ஆனா அந்த மாயனத்துல ஒரே ஒரு ஆளு மட்டும் சிரிச்சுட்டு இருந்தாரு. பார்த்ததும் நான் செம கடுப்பாகிட்டேன். அந்த ஆளு லூசா இருப்பானோனு கூட நினைச்சேன். அந்த ஆளு தான் வெட்டியான் (அல்லது) அந்த மயானத்தோட In-Charge. அப்ப ஒரு கேள்வி தோனிச்சு எனக்கு. எவ்வளவு ஆளுங்க இந்த மயானத்துல கதறி அழுதாலும் இந்த வெட்டியான் மட்டும் சாதாரணமா சிரிச்சுட்டு நிக்குறாரு. அது எப்படி? ஒரு வேலை இந்த துக்கம் எல்லாம் அவருக்கு ஒன்னும் இல்லையோ, ஏனா செத்துப்போனவங்க யாருமே இவருக்கு தெரிஞ்சவங்க இல்லை.. அதனால அவரு சிரிச்சுக்கிட்டு இருக்காரோனு நினைச்சுக்கிட்டேன். ஒரு வேலை தினமும் இதை எல்லாம் பார்த்து அவருக்கு இந்த துக்கம் எல்லாம் ஒன்னும் இல்லையோ? அப்படி ஒரு பக்குவம் வந்துருக்குமோ அவருக்கு? இது தான் முதல் கேள்வி என் மனசுல அந்த நேரம்.  இது போல பல கேள்வி அன்னைக்கு மட்டும் எனக்கு.


தொடரும்......

No comments: